மீண்டும் நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதும் ஆசை இன்று துளிர்விட்டுள்ளது. என்ன எழுதுவது அன்று தெரியவில்லையாயினும், ஏதாவது பகிரவேண்டும் போலுள்ளது. இதற்கு தனிமை ஒரு காரணம் எனச் சொல்லலாம்.
"ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே வாழ்ந்திடுவோமே
வாழ்நாளிலே."
என் கனவு ஒரு ஓடம். அதுவும் துடுப்பு இழந்த ஓடம். வாழ்க்கைச் சாகரத்திலே தத்தளிக்கிறேன். எனக்கு மிக மிக நெருங்கியவர்களுக்கு நான் சொல்வது புரியும். ஆனால் அவ்வாறு புரிந்து கொண்டவர்கள் பலபேருக்கு இதை வாசித்து விளங்குவது முடியாத காரியம். ஏனெனில், அவர்களால் நான் எழுதியவற்றை வாசித்து விளங்க முடியாது.
"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
என் நண்பர்களைப் பற்றிக் கூற மிகப் பொருத்தமாக என் நினைவிற்கு வருவது இக்குறளே. உண்மையில் என் துக்கம், துயரம், சந்தோசம், சிரிப்பு, அழுகை, வலி, வெற்றி, தோல்வி என அனைத்தையும் கண்டது, காண்கின்றது மற்றும் உறுதுணையாக நிற்பது அவர்களே. என் துயரத்தின் ஆழமும், மகிழ்ச்சியின் உச்சமும் கண்டவர்கள் அவர்கள். உடன்பிறவா உறுதுணையாக நிற்கும் அவர்களை என் வாழ்க்கையில் அறிமுகப்படுத்திய இறைவா உனக்கு எனது கோடான கோடி நன்றிகள்.
இந்தப் பாடல் என் நண்பர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம்.
ஒரு நண்பன் இருந்தால்
-ஜனகன்